ஆண்டுக்கு 5 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி சட்டசபையில் சித்தராமையா தகவல்

கர்நாடகத்தில் ஆண்டுக்கு 5 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்–மந்திரி சித்தராமையா கூறினார். தொழில் பயிற்சி கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் ஆளும் காங்கிரஸ் உறுப்பினர் டாக்டர் சுதாகர் கேட்ட கேள்விக்கு முதல

Update: 2017-06-06 20:03 GMT

பெங்களூரு.

கர்நாடகத்தில் ஆண்டுக்கு 5 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

தொழில் பயிற்சி

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் ஆளும் காங்கிரஸ் உறுப்பினர் டாக்டர் சுதாகர் கேட்ட கேள்விக்கு முதல்–மந்திரி சித்தராமையா பதிலளிக்கையில் கூறியதாவது:–

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் தொழில் பயிற்சி மற்றும் வாழ்வாதாரம் என்ற பெயரில் ஒரு இலாகா உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த இலாகா என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. நடப்பு ஆண்டில் 5 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம். இன்றைய சந்தைக்கு ஏற்ப தொழில் பயிற்சி வழங்க வேண்டும் என்பது இந்த இலாகாவின் நோக்கம் ஆகும்.

வாழ்வாதாரத்திற்கான வழி

இதுவரை 1.60 லட்சம் பேருக்கு தொழில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 5 லட்சம் இளைஞர்கள் தங்களின் பெயரை பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை இலவச பயிற்சி வழங்கப்படும். தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

ஆண்டுக்கு 5 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும். ஐ.டி.ஐ., என்ஜினீயரிங், டிகிரி படித்தவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கான வழியை தேடிக்கொள்ள முடியும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்