கதக்கில் 15 ஆயிரம் வீடுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் சட்டசபையில் மந்திரி எச்.கே.பட்டீல் தகவல்

கதக்கில் 15 ஆயிரம் வீடுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது என்று சட்டசபையில் மந்திரி எச்.கே.பட்டீல் கூறினார்.

Update: 2017-06-06 19:57 GMT

பெங்களூரு,

கதக்கில் 15 ஆயிரம் வீடுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது என்று சட்டசபையில் மந்திரி எச்.கே.பட்டீல் கூறினார்.

24 மணி நேரமும் குடிநீர் வினியோகம்

கர்நாடக சட்டசபையில் நேற்று வறட்சி மீது விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் எழுப்பிய சந்தேகங்களுக்கு கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி எச்.கே.பட்டீல் பதிலளிக்கையில் கூறியதாவது:–

கதக் நகரில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று 2014–15–ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. நகரில் 41 ஆயிரத்து 500 வீடுகள் உள்ளன. இதில் இதுவரை 20 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் 15 ஆயிரம் வீடுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

42 மில்லியன் லிட்டர் குடிநீர்

கதக்கில் குடிநீர் சரியாக கிடைக்கவில்லை என்று ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகிறார். அங்கொன்றும், இங்கொன்றுமாக சில குறைகள் இருக்கும். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் எல்லா பகுதிகளிலும் இந்த நிலை இல்லை. 15 ஆயிரம் வீடுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 41 ஆயிரத்து 500 வீடுகளுக்கும் மிக விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. கதக் நகருக்கு ஒரு நாளைக்கு 42 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எச்.கே.பட்டீல் கூறினார்.

மேலும் செய்திகள்