இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மணிக்கூண்டில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-06-06 21:30 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மணிக்கூண்டில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என தடை விதித்த மத்திய அரசை கண்டித்து நடந்தது. இதற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் லட்சுமண பெருமாள் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தடை உத்தரவு காரணமாக கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்படுவது பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அந்த தடை உத்தரவை ரத்து செய்யக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், தமிழக விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் செல்வராஜ், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் நிக்கோலஸ், செயலாளர் சச்சிதானந்தம், நீரினை பயன்படுத்துவோர் சங்க செயலாளர் பரமசிவம் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்