செந்துறையில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

செந்துறையில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

Update: 2017-06-06 19:52 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு உள்ள ஆழ்குழாய் கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்படும் மின் மோட்டார் பழுது ஏற்பட்டது. இதனால் 2 நாட்களாக இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இந்நிலையில் நேற்று செந்துறை-அரியலூர் சாலையில் திடீரென அந்த கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செந்துறை தாசில்தார் வேல்முருகன், சாலை மறியலில் ஈடுபட்டவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடனடியாக மின் மோட்டாரை பழுது நீக்கி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று கூறப்பட்டதை யடுத்து அனைவரும் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் செந்துறை-அரியலூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்