குடிநீர் வசதி செய்து தரக்கோரி யூனியன் அலுவலகம் முற்றுகை
வெம்பக்கோட்டையில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி யூனியன் அலுவலகம் முற்றுகை
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகிலுள்ள எட்டக்காப்பட்டி அருந்ததியர் காலனியில் வசிப்போர் சீரான குடிநீர் வினியோகத்துக்கு ஏற்பாடு செய்துதரவேண்டும், சமுதாயக்கூடம் அமைத்து தரவேண்டும், வாருகால் வசதி செய்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். இதில் ஆதித்தமிழர் மக்கள் இயக்கத்தின் தலைவர் சக்திவேல், கிளை செயலாளர் கணேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.