பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனிடம் போலீஸ் விசாரணை
ஓமலூரில் லாரி கிளனர் மர்மமான முறையில் இறந்தது குறித்து பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
ஓமலூர்,
மேலும், இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
லாரி கிளீனர்
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள டேனிஸ்பேட்டை ஊராட்சி பெரியவடகம்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி, கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி முனியம்மாள். இவர்களது மகன்கள் சதீஷ்குமார் (வயது 18), ஜோதிமணி (16). மகள் சங்கீதா (20). இவர்களில் சதீஷ்குமார் லாரி கிளனர் வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் சதீஷ்குமார் கடந்த 3-ந் தேதி மாலை தனது மோட்டார் சைக்கிளில் பெரியவடகம்பட்டியில் உள்ள தங்களது தோட்டத்தில் இருக்கும் வீட்டிற்கு சென்றார். அப்போது பெரியவடகம்பட்டியை சேர்ந்த யுவராஜ் என்பவரின் வீட்டின் அருகே அதே கிராமத்தைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீரரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மாரியப் பனின் கார் நின்று கொண்டிருந்தது.
கார் மீது மோதியது
அங்கு வந்தபோது சதீஷ்குமார் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரின் பின்பக்க கதவின் கைப்பிடி சேதமடைந்தது. உடனே, மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் யுவராஜ், சபரி ஆகிய 3 பேரும் சதீஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், சிறிது நேரம் கழித்து மாரியப்பன் உள்ளிட்ட 3 பேரும் இரவு சதீஷ்குமார் வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த சதீஷ்குமார், அவரது தாய் முனியம்மாள் ஆகியோரிடம் காரின் கதவு கைப்பிடியை சரிசெய்து தருமாறு கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
உடனே சதீஷ்குமாரும், முனியம்மாளும் காரை பழுது பார்க்க ஆகும் செலவை தந்து விடுகிறோம் என்று கூறினர். இது தொடர்பாக சதீஷ்குமார் தனது நண்பரிடம் செல்போனில் பேச முற்பட்டார். அப்போது அந்த செல்போனை அவர்கள் பிடுங்கி சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் சென்றவுடன் சதீஷ்குமார் வீட்டைவிட்டு வெளியே சென்றார். ஆனால், மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர்.
தண்டவாளம் அருகே பிணம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் வீட்டின் அருகே செல்லும் சேலம்-சென்னை ரெயில் தண்டவாளம் அருகில் மர்மமான முறையில் சதீஷ்குமார் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதுபற்றி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் விரைந்து சென்று சதீஷ்குமாரின் உடலை மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் வெளியானது. இதையடுத்து சதீஷ்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
மாரியப்பனிடம் விசாரணை
மேலும், சதீஷ்குமார் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் தடகள வீரர் மாரியப்பன், அவரது நண்பர்கள் யுவராஜ், சபரி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உடலை வாங்க மறுத்து போராட்டம்
இதற்கிடையே, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ள சதீஷ்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நேற்று காலை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், ஆஸ்பத்திரியில் திரண்டிருந்த உறவினர்கள், சதீஷ்குமாரின் சாவில் மர்மம் உள்ளது. அவரது சாவிற்கு மாரியப்பன்தான் காரணம். எனவே, அவரை கைது செய்து விசாரணை நடத்தும் வரை சதீஷ்குமாரின் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த ரெயில்வே போலீசார், இந்த பிரச்சினையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்குபின் மாலை 5.45 மணிக்கு சதீஷ்குமாரின் உடலை உறவினர்கள் பெற்றுச்சென்றனர்.
இந்த நிலையில் சதீஷ்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நேற்று சேலம் ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேசன், இன்ஸ்பெக்டர் இளவரசி, தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும், சாவில் சந்தேகம் இருப்பதாக சதீஷ்குமாரின் உறவினர்கள் தெரிவித்து வருவதால் இந்த வழக்கை சேலம் ரெயில்வே போலீசில் இருந்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி பணம் பறிக்க முயற்சிக்கின்றனர்”
தடகள வீரர் மாரியப்பன் பேட்டி
தடகள வீரர் மாரியப்பன்
“எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி பணம் பறிக்க முயற்சிக்கின்றனர்“ என்று தடகள வீரர் மாரியப்பன் கூறினார்.
புதிய கார் வாங்கினேன்
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூருவில் பயிற்சியில் இருந்த நான் சொந்த ஊரில் உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த 3-ந் தேதி இரவு பெரியவடகம்பட்டிக்கு வந்தேன். ஒரு மாதத்துக்கு முன்பு புதிதாக வாங்கிய எனது காரை பெரியவடகம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே நிறுத்தியிருந்தேன்.
சம்பவத்தன்று மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த சதீஷ்குமார் எனது கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார். இதில் எனது காரின் பின்பக்க கதவு கைப்பிடி உடைந்து விட்டது. இதுகுறித்து அவரது வீட்டிற்கு சென்று சதீஷ்குமாரிடம் கேட்டோம். அங்கிருந்த அவரது தாய் காரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஏற்பட்ட செலவை நாங்கள் கொடுத்து விடுகிறோம் என கூறினார்.
பணம் பறிக்க முயற்சி
அதற்கு நான், பணம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கார் மீது மோதிய சதீஷ்குமார் நின்று பதில் சொல்லிவிட்டு வந்திருக்கலாம் என கூறிவிட்டு அங்கிருந்து வந்து விட்டோம். நாங்கள் அவரது வீட்டிற்கு சென்றபோது விபத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது தொடர்பாக சதீஷ்குமாருக்கும், அவரது தாய்க்கும் ஏற்கனவே தகராறு நடந்து கொண்டிருந்தது. அப்போது சதீஷ்குமார் அவரது செல்போனை கீழே போட்டு உடைத்தார்.
சதீஷ்குமார் குடும்பத்துக்கும், எங்களுக்கும் எந்தவித முன்விரோதமும் இல்லை. இந்த நிலையில் சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதை பயன்படுத்தி சிலர் என் மீது அவதூறு பரப்புகிறார்கள். இந்த சம்பவத்தில் என்னை சிக்க வைத்து எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தவும், எனக்கு வேண்டாத சிலர் என்னிடம் பணம் பறிக்கவும் முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, சதீஷ்குமாரின் உடல் நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி மாரியப்பன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.