மோகனூர் அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ளிய லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு
மோகனூர் அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ளிய லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடன்பாடு ஏற்பட்டது.
மோகனூர்,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு அரசு மணல் குவாரி தொடங்க நேற்று காலை 10 மணியளவில் பூஜை நடைபெற்றது.
இதைதொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி லாரிகளில் ஏற்றினார்கள். மணல் ஏற்றிய 6 லாரிகள் குவாரியில் இருந்து வெளியே வந்தன. அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் திரண்டு வந்து லாரிகளை தடுத்து நிறுத்தி சிறை பிடித்தனர். காவிரி ஆற்றில் இருந்து மணல் அள்ளிக்கொண்டு செல்லக்கூடாது என்றனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நாமக்கல் போலீஸ் குற்றப்பதிவேடு கூட துணை சூப்பிரண்டு ஜான் சுந்தர், நாமக்கல் சமூகநல பாதுகாப்பு திட்ட தாசில்தார் பிரகாஷ், பொதுப்பணித்துறை செயற்பொறி யாளர் இளங்கோ ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது, மணல் அள்ளும் பகுதியில் எல்லைக்கோடு நிர்ணயிக்க வேண்டும், மணல் அள்ளுவது குறித்து அமைதிக்குழு அமைத்து பேசி முடிவு எடுக்க வேண்டும், அதுவரை காவிரி ஆற்றில் மணல் அள்ளக்கூடாது என்று பொதுமக்களும், விவசாயிகளும் கூறினார்கள். மேலும் அள்ளிய மணலை காவிரியில் திரும்ப கொட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
இதையடுத்து லாரிகளில் ஏற்றிய மணலை காவிரி ஆற்றில் கொட்டினார்கள். பின்னர் லாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. பொதுமக்களும், விவசாயிகளும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.