மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி நாடக கலைஞர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நாடக கலைஞர், குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.;
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே முக்குளம் வசந்தம் நகரை சேர்ந்தவர் பாபு (வயது 36), நாடக கலைஞர். இவர் தனது தாயார் குலோப்ஜான், சகோதரி பர்வீன், மகள்கள் அமீனா (5), முபினா (4) ஆகியோருடன் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது பாபு மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து மகள்கள், தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் மீது ஊற்றி விட்டு தன் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினார். பின்னர் போலீசார் பாபுவிடம் விசாரணை நடத்தினர். மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி குடும்பத்தினருடன் தீக்குளிக்க வந்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கலெக்டரிடம் மனு
இதைத்தொடர்ந்து நாடக கலைஞர் பாபு கலெக்டர் விவேகானந்தனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், எனது மனைவி யாஸ்மின் (30) என்னைவிட்டு பிரிந்து விட்டார். நானும் எனது மனைவியும் சேர்ந்து வாழ்வதை உறவினர் சபீர் என்பவர் தடுத்து வருகிறார். அவரிடம் இருந்து எனது மனைவியை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போலீசாருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.