ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் பதாகைகளை ஏந்தி போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசல் பொதுமக்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடகாடு,
வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த மாதம் 12-ந் தேதி 2-வது கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு கோஷங்கள்
இந்தநிலையில், நேற்று 55-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி உள்பட 4 பேரையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.