கே.வி.குப்பம் அருகே போலீசார், வருவாய்த்துறையினரை கண்டித்து போராட்டம்

கே.வி.குப்பம் அருகே போலீசார், வருவாய்த்துறையினரை கண்டித்து போராட்டம்

Update: 2017-06-05 22:45 GMT
குடியாத்தம்,

கே.வி.குப்பம் ஒன்றியம் சோழமூர் ஊராட்சி ராமாவரம் பகுதியில் பழமையான தேவாலயம் உள்ளது. அதன் அருகில் புதிதாக தேவாலயம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் தேவாலயம் பகுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளனர். இதற்கு அருகில் உள்ள மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒருதரப்பினர் லத்தேரி போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் சரிவர விசாரணை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரை கண்டித்து ராமாவரம் பகுதியில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேவாலயம் பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது தேவாலயத்திற்கு சொந்தமான இடத்தை வருவாய்த்துறையினர் உடனடியாக அளந்து கொடுக்க வேண்டும் என்றும், சுற்றுச்சுவர் கட்டி கொடுக்கும் வரை போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 நாட்களில் நிலத்தை அளந்து கொடுப்பதாகவும், சுற்றுச்சுவர் கட்டும்வரை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் உறுதி கூறினர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்