ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி
மகனும், மருமகளும் கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு விரட்டியதால் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் மனைவியுடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தபோது மதியம் 12.30 மணி அளவில் வயதான தம்பதி கையில் வைத்திருந்த மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் கேனை கைப்பற்றினர்.
பின்னர் போலீசார், வயதான தம்பதியை மனு கொடுக்க மாவட்ட கலெக்டரிடம் அழைத்து சென்றனர். அவர்கள் கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வீட்டை விட்டு துரத்தினர்
நாங்கள் காட்பாடி அருகே உள்ள வண்டறந்தாங்கல் கோட்டை மோட்டூரில் வசித்து வருகிறோம். எனது பெயர் ராமகிருஷ்ணன் (வயது 78). மாற்றுத்திறனாளியான நான் ரெயில்வே துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். எனது மனைவி கோபியம்மாள் (68). எங்களுக்கு குழந்தை இல்லாததால், ஒரு குழந்தையை தத்தெடுத்து வேல்முருகன் என்று பெயர் சூட்டி வளர்த்தோம். அவருக்கு கொணவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தோம்.
இந்த நிலையில் வேல்முருகன் 2-வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து, அவனும், அவரது 2-வது மனைவியும் சேர்ந்து கொண்டு என்னையும், எனது மனைவியையும் கொடுமைப்படுத்துகின்றனர். மேலும் வேல்முருகன் கடந்த ஆண்டு மண்எண்ணெய் ஊற்றி என்னை கொலை செய்ய முயற்சியும் செய்துள்ளார்.
இருவரும் கடந்த சில மாதங்களாக எங்களை கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு விரட்டி விட்டனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது வீட்டை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதனையடுத்து வயதான தம்பதி அங்கிருந்து சென்றனர்.