சினிமா பாணியில் சம்பவம்: தேவாலய உண்டியலில் நூதன முறையில் பணம் திருடியவர் கைது
அரக்கோணத்தில் சினிமா பாணியில் கிறிஸ்தவ தேவாலய உண்டியலில் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம்,
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த குட்டிபுலி என்ற படத்தில் நடிகர் சசிக்குமார் கோவிலில் உள்ள உண்டியலில் பணத்தை திருடுவதற்கு குச்சியில் சுவிங்கத்தை சுற்றி உண்டியலில் விட்டு பணத்தை எடுப்பார். இதேபோல் அரக்கோணத்தில் ருசிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
அரக்கோணம் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. அந்த தேவாலயத்தின் வாசல் பகுதியில் உண்டியல் உள்ளது. அரக்கோணத்தை சேர்ந்த பவகர்ணல் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பவகர்ணல் பணியில் இருந்த போது உண்டியல் அருகே வாலிபர் ஒருவர் குச்சியை உண்டியலுக்குள் விட்டு ஏதோ செய்து கொண்டு இருந்தார். இதை பார்த்த காவலாளி, அந்த வாலிபர் அருகே சென்றபோது அவர் குச்சியை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினார். காவலாளி அந்த வாலிபரை துரத்தி சென்று மடக்கி பிடித்தார்.
வாலிபரின் கையில் உண்டியலில் இருந்து எடுத்த பணம் இருந்தது. இதனையடுத்து காவலாளி, பிடிபட்ட வாலிபரை அரக்கோணம் டவுன் போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
குச்சியில் சுவிங்கத்தை சுற்றி...
விசாரணையில் பிடிபட்டவர் திருவள்ளூர் அருகே உள்ள செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த ஞானவேல்ராஜ் என்பவரின் மகன் அக்னல் ஆரோக்கியராஜ் (வயது 36) என்பது தெரியவந்தது. அவர், போலீசாரிடம் கூறியதாவது:-
நான் திருவள்ளூர் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தேன். கடந்த 15 நாட்களாக கடையில் வேலை இல்லாததால் தினமும் செவ்வாய்பேட்டையில் இருந்து மின்சார ரெயிலில் அரக்கோணம் வந்து விடுவேன். ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றி வந்தேன். அப்போது ரெயில் நிலையம் அருகே உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்பாக வைக்கப்பட்டு இருந்த உண்டியலில் மக்கள் பணம் போடுவதை பார்த்தேன்.
பின்னர் அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாதபோது உண்டியலில் உள்ள பணத்தை எடுப்பதற்காக குச்சியில் சுவிங்கத்தை சுற்றி உண்டியலில் விட்டு பணத்தை எடுத்தேன். முதலில் எடுக்கும் போது 500 ரூபாய் வந்துவிட்டால் அதை எடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுவேன். 100 ரூபாய் வந்தால் திரும்பவும் சுவிங்கத்தை பயன்படுத்தி பணம் எடுப்பேன்.
கடந்த 15 நாட்களாக இப்படியே பணத்தை எடுத்து வந்தேன். நேற்று முன்தினம் வழக்கம் போல பணத்தை திருடிக் கொண்டு இருந்தபோது சிக்கி கொண்டேன்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
கைது
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.