மாநில அளவிலான கைப்பந்து போட்டி 10-ந் தேதி தொடங்குகிறது

எட்டயபுரம் அருகே மாநில அளவிலான கைப்பந்து போட்டி வருகிற 10-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது.

Update: 2017-06-05 21:33 GMT
எட்டயபுரம்,

எட்டயபுரம் அருகே உள்ள படர்ந்தபுளி விளையாட்டு மைதானத்தில் லியா கைப்பந்து கழகம் சார்பில், 14-ம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி வருகிற 10-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து 2 நாட்கள் போட்டிகள் நடக்கிறது. தொழில் அதிபர் சண்முகவேல் தலைமை தாங்குகிறார். மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ், மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ஜான் வசீகரன், செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம், ஸ்ரீவை குண்டம் யூனியன் ஆணையாளர் முத்துகுமார், சர்வதேச கைப்பந்து போட்டி நடுவர் சீனிவாசன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைக்கின்றனர்.

பரிசுகள்

இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டிகளில் வெற்றி பெறுகிற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.10,014, 2-வது பரிசாக ரூ.7,014, 3-வது பரிசாக ரூ.5,014, 4-வது பரிசாக ரூ.4,014 வழங்கப்படுகிறது.

ஏற்பாடுகளை லியா கைப்பந்து கழகம், மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் படர்ந்தபுளி ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்