அம்மாபேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
அம்மாபேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
அம்மாபேட்டை,
அம்மாபேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அம்மாபேட்டை ஒன்றியம் கேசரி மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏமாம்பாளையம் அருகே உள்ள கருட்டுக்கரடு கிராமத்தில் 100 குடும்பத்தினர் வசித்து வந்தார்கள். ஆழ்குழாய் அமைத்து மேல்நிலை தொட்டியில் தண்ணீர் ஏற்றி குழாய் வழியாக இந்த பகுதி பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் ஆழ்குழாய் வற்றியதால் கடந்த 6 மாதமாக ஏமாம்பாளையம் கிராமமக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வந்தார்கள்.