ஆரணியில் 192 பேருக்கு ரூ.1 கோடி திருமண உதவித்தொகை

ஆரணியில் நடந்த விழாவில் 172 பேருக்கு ரூ.1 கோடி திருமண உதவித்தொகையை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.

Update: 2017-06-04 22:18 GMT

ஆரணி,

ஆரணியில் நடந்த விழாவில் 172 பேருக்கு ரூ.1 கோடி திருமண உதவித்தொகையை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.

தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்ட சமூகநலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தண்டாயுதபாணி, செய்யாறு உதவி கலெக்டர் (பொறுப்பு) பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்டாதி ஆர்த்தி வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு 10 மற்றும் 12–ம் வகுப்பு முடித்த 124 பேருக்கு தலா ரூ.25 ஆயிரமும், பட்டம் படித்த 68 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் மற்றும் 8 கிராம் தங்கம் என மொத்தம் 192 பேருக்கு ரூ.1 கோடியே 11 லட்சத்து 79 ஆயிரமும், 1,536 கிராம் தங்கமும் வழங்கி பேசுகையில், ‘கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதமாகவும், ரூ.12 ஆயிரம் உதவித்தொகை ரூ.18 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது.

உழவர் பாதுகாப்பு திட்டத்தில்...

முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 310 நபர்களுக்கு ரூ.239 கோடியே 37 லட்சத்தில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 305 விவசாயிகளுக்கு ரூ.63 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் தூசி கே.மோகன், பன்னீர்செல்வம், மாவட்ட அவைத்தலைவர் ஜெமினி ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் கருணாகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சமூகநல விரிவு அலுவலர் சுசீலா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்