சிறுமிக்கு பாலியல் தொல்லை மாணவன் உள்பட 3 பேர் மீது வழக்கு

திருவண்ணாமலை அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 4–ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார்.

Update: 2017-06-04 22:13 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 4–ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார். தற்போது கோடை விடுமுறை என்பதால் சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு துரிஞ்சாபுரத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 31–ந் தேதி அந்தபகுதியை சேர்ந்த 15 வயதுடைய 9–ம் வகுப்பு மாணவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறினார். அதையடுத்து பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து சிறுமியின் தாய் மாணவனின் பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு மாணவனின் பெற்றோர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக சிறுமியின் தாய் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மாணவன் மற்றும் அவனது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்