விசாகப்பட்டினத்தில் இருந்து 2700 டன் உரம் ரெயில் மூலம் காட்பாடிக்கு வந்தன
விசாகப்பட்டினத்தில் இருந்து காட்பாடி ரெயில் நிலையத்திற்கு 2700 டன் யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்கள் ரெயில் மூலம் வந்தன.
காட்பாடி,
விசாகப்பட்டினத்தில் இருந்து காட்பாடி ரெயில் நிலையத்திற்கு 2700 டன் யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்கள் ரெயில் மூலம் வந்தன. இந்த உரங்கள் வேளாண்மைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ரெயிலில் இருந்து இறக்கி உரக்கிடங்கில் வைக்கப்பட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு யூரியா 1350 டன்னும், டி.ஏ.பி. 1350 டன்னும் விசாகப்பட்டினத்தில் இருந்து ரெயில் மூலம் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளது.
இந்த உரங்கள் தற்போது உரக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு 270 டன் யூரியா, 140 டன் டி.ஏ.பி., காஞ்சீபுரத்திற்கு 230 டன் யூரியா, 60 டன் டி.ஏ.பி. லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. மற்றவை வேலூர் மாவட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது’ என்றனர்.