விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

Update: 2017-06-04 21:20 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள இளையபெருமாள் நல்லூர் காலனி தெருவை சேர்ந்தவர் சுபா சுந்தர் (வயது 27). இவர் இளங்கலை பட்டம் பெற்றவர். இவருக்கு திருமணம் நடைபெற்று 5 ஆண்டுகள் ஆகிறது. வேலை கிடைக்காமல் கூலி வேலைக்கு சென்று வந்தார். அரசு வேலை கிடைக்கவில்லையே என்ற மனவருத்தத்தில் மது குடித்து வந்துள்ளார். இதனால் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி வந்துள்ளது. இதையடுத்து பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும் வயிற்று வலி குணமாகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மீண்டும் சுபா சுந்தருக்கு வயிற்று வலி வந்துள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த குருணை மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை வீட்டில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுபா சுந்தர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுபா சுந்தரின் தாய் ஜோதி கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராயர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்