பாதாள சாக்கடை திட்டப்பணிக்கு உயிரூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
பழைய திருச்சி நகராட்சி பகுதி மற்றும் மாநகராட்சியுடன் ஏற்கனவே இணைக்கப்பட்ட சில பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.
மறைந்த ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சராக இருந்தபோது, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் மாநகராட்சியை சேர்ந்த 6 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்க தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து முடிந்து உள்ளன.
2-ம் கட்ட பாதாள சாக்கடை திட்டம்
இது தவிர திருச்சி மாநகராட்சியின் மற்ற பகுதிகளில் 2-ம் கட்டமாக ரூ.340 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. 2-ம் கட்ட திட்டத்தில் திருச்சி நகரின் மிகப்பெரிய குடியிருப்பு பகுதிகளான கருமண்டபம், கே.கே.நகர், விமான நிலையம் பகுதிகள் முக்கிய இடத்தை பெற்று இருந்தன. இந்த திட்டத்தை இறுதி செய்து தமிழக அரசுக்கு திருச்சி மாநகராட்சி அனுப்பி இருந்தது. தமிழக அரசு அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து நிதி உதவி கேட்டது. கடந்த 2016-ம் ஆண்டே 2-ம் கட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை எவ்வித முன்னேற்றமும் இன்றி அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
வைப்புத்தொகை வசூல்
இந்த திட்டமானது மத்தியஅரசின் நிதிஉதவி, மாநில அரசின் நிதி ஒதுக்கீடு மற்றும் திருச்சி மாநகராட்சி பகுதி மக்களின் பங்களிப்போடு செயல்படுத்தப்படுவதாக இருந்தது. இதற்காக மாநகராட்சி பகுதியில் கோட்டம் வாரியாக பொதுமக்களிடம் பாதாள சாக்கடை இணைப்புக்காக வீடுதோறும் முன் வைப்புத் தொகையும் பெறப்பட்டது.
பொதுமக்களும் சாக்கடையில் இருந்து விடிவுகாலம் பிறந்தால் சரி என்ற எண்ணத்தோடு வைப்புத்தொகையை ஆர்வமுடன் செலுத்தினார்கள். ஆனால் இந்த திட்ட அறிக்கையானது மாநில அரசுக்கு அனுப்பி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் எந்த பதிலும் வரவில்லை.
கைவிரித்த மத்திய அரசு
இதுபற்றி திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்த போது, திருச்சி மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் புனித நதியாக போற்றப்படும் காவிரியில் கலக்கிறது. இதனால் காவிரியின் புனித தன்மை கெடுவதோடு சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படுகிறது. கழிவுநீரை முறையாக கையாண்டு பயன்படுத்த தெரியாத திருச்சி மாநகராட்சிக்கு ஒரு சல்லிக்காசு கூட நிதி ஒதுக்க முடியாது என கூறி மாநில அரசின் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பி கைவிரித்து விட்டதாக கூறுகிறார்கள்.
தமிழகத்தில் தற்போது ஒரு தெளிவான அரசியல் தன்மை இல்லாமல் குழப்பமான சூழல் நிலவி வருவதால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள். அதுமட்டும் அல்ல காவிரியில் கழிவுநீரை கலக்க விடாமல் தடுப்போம் என உறுதி அளிக்க கூட முடியாத நிலையில் மாநில அரசு இருப்பதால் 2-ம் கட்ட பாதாள சாக்கடை திட்டப்பணி திருச்சி மாநகராட்சிக்கு வருமா? வராதா? அவ்வளவு தானா? என்ற கேள்விகள் எழுந்து உள்ளன.
மக்கள் போராட்டம்
கே.கே.நகரின் அனைத்து தெருக்கள், மற்றும் அய்யப்பநகர், ரெங்காநகர், இந்தியன் வங்கி காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர் உள்பட அனைத்து பகுதிகளிலும் சாக்கடை நீர் வெளியேற முறையான வடிகால் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் தெருக்களில் தான் தேங்கி நிற்கின்றன. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு மக்கள் பல நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
இதே நிலைதான் திருச்சி நகரின் பல பகுதிகளிலும் உள்ளது. இந்த அவல நிலையை போக்க இந்த பகுதிகளில் சாக்கடை திட்டம் வந்தே தீர வேண்டும். எனவே கிடப்பில் போடப்பட்ட திட்டத்துக்கு உயிரூட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையேல் மக்கள் போராட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை தான் ஏற்படும்.