ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் படகில் சவாரி செய்து உற்சாகம்

ஒனேக்கல்லில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்து படகில் சென்று உற்சாக சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Update: 2017-06-04 23:00 GMT
பென்னாகரம்,

போதிய மழை பெய்யாததால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவி தண்ணீரின்றி வறண்டு கிடந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் அடியோடு நின்று போனது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதம் 20-ந்தேதி வரை நீடித்த இந்தநிலையால் ஒகேனக்கல்லில் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பரிசல் ஒட்டுபவர்களும் வருமானம் இன்றி தவித்தனர்.

இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல் அருவியில் கடந்த 20-ந்தேதி முதல் தண்ணீர் விழுகிறது. இதனால் கடந்த மே மாதம் இறுதி வாரம் முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

படகு சவாரி

இதேபோல கோடை விடுமுறையின் இறுதி ஞாயிற்றுக் கிழமையான நேற்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர். அருவியில் அதிகளவு தண்ணீர் கொட்டியதால் அதில் குளித்து ஆனந்தம் அடைந்தனர். பெரியபாணி வழியாக பரிசலில் குடும் பத்துடன் சென்று உற்சாகம் அடைந்தார்கள்.முதலைப்பண்ணை, சிறுவர் பூங்காவுக்கு சென்று பார்த்து ரசித்தனர். காவிரி அழகை கண்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குதூகலித்தனர்.நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் மீன் விற்பனை படுஜோராக இருந்தது.

மேலும் செய்திகள்