“மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல்-அமைச்சர் என்பதா?” பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று கூறிய நிதிஷ்குமாருக்கு, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகர்கோவில்,
சென்னையில் தி.மு.க சார்பில் நடைபெற்ற விழா வைர விழா அல்ல. கடந்த 50 ஆண்டு காலமாக ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருந்து தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு தடைபோட்டவர்கள், மீண்டும் 50 ஆண்டு காலம் தொடர முடியுமா? என்று இந்த விழா மூலம் முயற்சி செய்திருக்கின்றனர்.
விழாவில் அடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என நிதிஷ்குமார் உள்ளிட்டவர்கள் பேசி உள்ளனர். அவர்களுக்கு தமிழகத்தில் ஒரு சதவீத வாக்கு வங்கி கூட கிடையாது. இவர்களா தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சரை தீர்மானிப்பவர்கள்?
கூடா நட்பு கேடாய் முடியும் என்று காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து முன்பு கருணாநிதி கூறினார். தற்போது காங்கிரஸ்காரர்களை மேடையில் அமர்த்தி கருணாநிதிக்கு புகழாரம் சூட்டுகின்றனர்.
உத்தரவிட்டது யார்?
2007-ம் ஆண்டு மத்திய மந்திரியாக இருந்த டி.ஆர்.பாலுதான் சாலையில் உள்ள மைல் கற்களில் இந்தியில் எழுத உத்தரவு பிறப்பித்தார். கேட்டால் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என்று கூறுகின்றனர். ஆனால் அவர்களது செயல்பாடு வேறு மாதிரியாக உள்ளது.
காஷ்மீர் மாநிலத்தை பொறுத்தவரையில் இதற்கு முன்பு யாரும் உள்ளே நுழைய முடியாத நிலை இருந்தது. தற்போது மெல்ல, மெல்ல அமைதி திரும்பி வருகிறது.
இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். பேட்டியின் போது பா.ஜனதா பிரசார பிரிவை சேர்ந்த எஸ்.எஸ்.மணி, சுகுமாரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.