வைரஸ் காய்ச்சல் காரணமாக வைத்திலிங்கம் எம்.பி. மருத்துவமனையில் அனுமதி
வைரஸ் காய்ச்சல் காரணமாக தஞ்சை தனியார் மருத்துவமனையில் வைத்திலிங்கம் எம்.பி. அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர்,
அ.தி.மு.க. (அம்மா) அமைப்பு செயலாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் எம்.பி. உடல் நலக்குறைவு காரணமாக தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பினார். நேற்றுகாலை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பருத்தியப்பர்கோவிலில் அரசு சார்பில் பல்நோக்கு திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
இதில் வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டார். பின்னர் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இந்தநிலையில் நேற்றுஇரவு திடீரென மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வைத்திலிங்கம் எம்.பி. மீண்டும் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டு இருப்பதும், தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதனைதொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிக்கல்
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைய வாய்ப்பு உள்ளது என்று நேற்று பேட்டி அளித்த நிலையில் வைத்திலிங்கம் எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு அணிகளையும் இணைப்பதற்காக அ.தி.மு.க. (அம்மா)வின் பேச்சுவார்த்தைக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் இரு அணிகளும் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.