அதிரடி சோதனை ரூ.1½ கோடி கள்ள ரூபாய் நோட்டுகள் சிக்கின 2 பேர் கைது
தென்காசி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூ.1½ கோடி கள்ள ரூபாய் நோட்டுகள் சிக்கின. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென்காசி,
தென்காசியில் இருந்து வெளியூர்களுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் தென்காசி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தென்காசியில் இருந்து இலஞ்சி செல்லும் ரோட்டில் மின்வாரிய அலுவலகம் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் போலீசாரை கண்டதும் ஒருவித நடுக்கத்துடன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை பிடுங்கி சோதனை செய்தனர்.
ரூ.6½ லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்
அந்த பையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கள்ளநோட்டுகளாக இருந்ததும், அவை ரூ.6½ லட்சம் மதிப்புடையவை என்பதும் தெரியவந்தது.
மேலும் அந்த கள்ளநோட்டுகள் வெளியூர்களுக்கு கடத்துவதற்காக அவர்கள் கொண்டு வந்ததும் தெரியவந்தது.
ஆனால் எந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பது மட்டும் தெரியவில்லை. உடனே போலீசார் அந்த 2 பேரையும், பிடிபட்ட கள்ளநோட்டுகளுடன் தென்காசி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
திடுக்கிடும் தகவல்கள்
பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள தலைவன்கோட்டை மேலத்தெருவை சேர்ந்த சாமித்துரை (வயது 49) என்பதும், இன்னொருவர் சங்கரன்கோவிலை சேர்ந்த அசன் (56) என்பதும், சாமித்துரை தற்போது சுரண்டையில் குடும்பத்துடன் வசித்து வந்ததும் தெரியவந்தது.
அவர்களிடம் போலீசார் நடத்திய மேல் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது சாமித்துரை, தன்னுடைய குடும்பம் தங்கி இருக்க வீடு எடுத்த போது, கள்ள ரூபாய் நோட்டு அச்சடிப்பதற்காக தனியாக மேலும் ஒரு வீடு எடுத்ததும் தெரியவந்துள்ளது.
அந்த வீட்டில்தான் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதற்கான தடயங்கள் அங்கு இருந்தன. இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கள்ளநோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய 3 கலர் ஜெராக்ஸ் எந்திரங்கள், உயர்ரக பேப்பர், மை உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கத்தை கத்தையாக சிக்கின
மேலும் அதே வீட்டில் துணியால் ஒரு இடம் மூடப்பட்டு இருந்தது. அந்த துணியை போலீசார் அகற்றியபோது, கத்தை கத்தையாக கள்ளநோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் 100, 500, 2000 ரூபாய் நோட்டுகள் ஆகும். இதைக்கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.1 கோடியே 36 லட்சத்து 60 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இந்த கள்ளநோட்டுகள் அனைத்தும் கடைகள், மார்க்கெட்டுகள் மற்றும் வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் வினியோகம் செய்வதற்கு பதுக்கி வைத்திருந்தும் தெரியவந்தது.
2 பேர் கைது
இதுதொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமித்துரை, அசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தென்காசி உதவி போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் மேல் விசாரணை நடத்தினார். கைதான 2 பேருடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுரண்டை பகுதியில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விட்டதாக சிலர் கைது செய்யப்பட்டனர். எனவே கள்ளநோட்டுகளை அச்சடித்து அதனை ஒரு கும்பலாக சேர்ந்து இவர்கள் வினியோகம் செய்து இருக்கிறார்கள்.
எனவே கைதானவர்களுடன் தொடர்புடையவர்கள் யார்? பறிமுதல் செய்யப்பட்டதை விட, வேறு எங்காவது கள்ள ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
கேரளாவுக்கு கடத்தலா?
கைதான 2 பேரும், தென்காசியில் இருந்து இலஞ்சி செல்லும் ரோட்டில் போலீசாரிடம் சிக்கி உள்ளதால் அவர்கள் கேரளாவுக்கு கள்ள நோட்டுகளை கடத்திச் செல்ல முயன்று இருக்கலாம் என்றும், இதேபோன்று பலமுறை அவர்கள் கள்ளநோட்டுகளை கேரளாவுக்கு கடத்திச் சென்று புழக்கத்தில் விட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த கும்பல் தென்காசி, சுரண்டை பகுதியில் ஏராளமான கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகள் கள்ளநோட்டுகளாக இருக்குமோ என்ற அச்சம் வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.