மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்: புதுவை அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்: புதுவை அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் 7–ந் தேதி நடக்கிறது

Update: 2017-06-04 22:30 GMT

புதுச்சேரி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உழவர்கரை நகரக்குழு கூட்டம் லாஸ்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்மாநில குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். உழவர்கரை நகர செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகரக்குழு உறுப்பினர்கள் சத்தியா, ஆனந்த், குணசேகரன், பாஸ்கர், மோகன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்–அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்துள்ள 2017–18–ம் ஆண்டுக்கான பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது. எனவே புதுவை அரசை கண்டித்து வருகிற 7–ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.

கிருஷ்ணாநகர் 12–வது குறுக்கு தெருவில் சாலைகள் உயரமாகவும், வீடுகள் பள்ளத்தில் இருப்பது போன்ற நிலை உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே வீடுகள் பாதிக்கப்படாமல் சாலைகளை மாற்றி சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் கட்ட வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்