ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Update: 2017-06-04 20:44 GMT

தாயில்பட்டி,

சாத்தூர் அருகிலுள்ள ஏழாயிரம்பண்ணையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

பராசக்தி மாரியம்மன் கோவில்

சாத்தூர் அருகிலுள்ள ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பிரமாண்ட யாக சாலை அமைக்கப்பட்டு கடந்த 1–ந் தேதி முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கணபதி ஹோமத்துடன் தொட்ங்கி 3 நாட்கள் பூஜைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. காலையில் 6–வது கால யாக பூஜை நடத்தப்பட்டு கும்பங்கள் புறப்பாடானது. கோவில் வளாகத்தில் வலம் வந்து கோபுர விமானம், ராஜகோபுரம், பரிவார விமானங்கள் ஆகியவற்றுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஏழாயிரம்பண்ணை மட்டுமின்றி சுற்று வட்டாரபகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பக்தி கோ‌ஷங்களை முழங்கி வழிபட்டார்கள்.

கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி தந்தார். அவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. நீண்ட வரிசையில் ஏராளமான பக்தர்கள் நின்று அம்மனை வழிபட்டுச்சென்றனர்.

அன்னதானம் கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஏழாயிரம்பண்ணை நாடார் உறவின் முறை தலைவர் ஆறுமுகச்சாமி, செயலாளர் பாண்டியராஜன், பொருளாளர் சவுந்திரபாண்டியன், உறவின் முறை பள்ளிகளின் தாளாளர் கண்ணன், மற்றும்சென்னை வாழ், கோவை பொள்ளாச்சி வாழ் நாடார் உறவின் முறை நிர்வாகிகளும் ஆதிபராசக்தி மாதர் சங்கம், பராசக்தி மாதர் சங்க நிர்வாகிகளும் செய்திருந்தனர். மேலும் ஏழாயிரம் பண்ணை நாடார் மகமை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சென்னை ஸ்ரீமுருகன் பெயிண்ட் கம்பெனி உரிமையாளர்கள் சார்பாக அன்னதானமும் வழங்கப்பட்டது

மேலும் செய்திகள்