செம்பட்டி பகுதிகளில் கடும் வறட்சி: டிராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்

செம்பட்டி பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியை தொடர்ந்து, டிராக்டர் மூலம் விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

Update: 2017-06-04 22:30 GMT

செம்பட்டி,

ஆத்தூர் ஒன்றியத்தில் சித்தரேவு, நெல்லூர், சிங்காரக்கோட்டை, போடிகாமன்வாடி, பாளையங்கோட்டை, வீரக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் 2 போக நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் ஒரு போக நெல் சாகுபடி கூட நடைபெறவில்லை.

பச்சை பசேலென காட்சியளித்த விவசாய நிலங்கள் தற்போது தரிசாக கிடக்கிறது. நெல் விவசாயம் முற்றிலும் கைவிடப்பட்டதால் விவசாயிகள் தற்போது சொட்டுநீர் பாசனம் மூலம் மா, நெல்லி, கொய்யா, சப்போட்டா, தென்னை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்துள்ளனர்.

டிராக்டர் மூலம்...

இருந்தபோதிலும் வெயிலின் தாக்கத்தால் மரக்கன்றுகள் கருகி வருகின்றன. எனவே மரக்கன்றுகளை காப்பாற்ற விவசாயிகள் டிராக்டரில் தண்ணீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சித்தரேவு, நெல்லூர், கே.சிங்காரககோட்டை உள்பட பல கிராமங்களில் இதே நிலை நீடித்து வருகிறது.

இதுகுறித்து பாளையங்கோட்டையை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதற்காக நாள் ஒன்றுக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை செலவாகிறது என்றனர்.

மேலும் செய்திகள்