செய்தி தரும் சேதி - 18. புகைப்பட போதை
உடலை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. நேசிப்பவர் களுக்கு உடல் உபாயம். அது ஒத்தாசை தருகிறது. கற்களைச் ஜீரணிப்பதற்கும், கடலில் மிதப்பதற்கும், காற்றில் பறப்பதற்கும் உடலைப் பழக்க முடியும்.

தினமும் நம் உடலின் பிரதிபலிப்பைக் கண்ணாடியில் பார்த்து அதைப்பற்றிய பிரக்ஞையை அதிகப்படுத்திக்கொள்வது அவசியம். அது உடம்பை வளர்க்கும் உபாயமாகும்.
உடலின் ஒவ்வொரு பாகத்தையும் மனதில் நினைத்து தளர்த்தும்போது புத்துணர்ச்சி ஏற்படுகிறது. உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காகச் செய்யும்போதுதான் நாம் அதை முழுமையாக நேசிக்கிறோம் என்று பொருள்.
இன்று உடலை நேசிப்பவர்கள் தங்களையே நேசிப்பவர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்கள் விதவிதமாக சுயநிழற்படமெடுத்து அழகு பார்க்கிறார்கள். காலையில் ஒன்று, மதியம் ஒன்று, மாலையில் ஒன்று, இரவில் ஒன்று என்று நின்றால் நிழற்படம், நடந்தால் சுயப்படம் என்று அலைபேசியில் அடித்துத்தள்ளுகிறார்கள்.
அவர்கள் சாப்பிடும் உணவைக்கூட அலைபேசியில் பதிந்த பிறகே அள்ளி விழுங்க ஆரம்பிக்கிறார்கள். இன்னும் சிலரோ யாரைப் பார்த்தாலும் அவர்களோடு நின்று நிழற்படம் எடுக் கிறார்கள். உள்ளே நுழையும் தொழில்நுட்பத்தால் புகைப்படமும் கலப்படம்.
அழகான அருவியை, நெடிதுயர்ந்த மலையை, அலைகள் எழுப்பும் கடலை, நாணிச்சிவந்த வானத்தை மனதால் படம் பிடிப்பது கருவியால் பிடிப்பதைக் காட்டிலும் உயர்ந்தது அல்லவா! அந்தத் தருணத்தை இழந்துவிட்டு ஆவணப்படுத்துவதால் என்ன பயன்!
எந்தக் காட்சியைப் பார்த்தாலும் அதை ரசிக்க மறந்துவிட்டு எந்தக் கோணத்தில் எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று சிந்திப்பதில் நிகழ்காலத்தை பலர் நழுவவிடுகிறார்கள். இவர்களுக்கு பிரமாண்டமாய் விரிந்திருக்கும் இயற்கையைவிட கைப்பேசியின் திரையே அகலமானதாகத் தெரிகிறது. அந்த நொடியைத் தவறவிட்டு இறந்த காலத்தில் வாழும் இவர்களுக்காக இரக்கப்படவே முடியும்.
புத்தாண்டு வருகிறபோது சென்னை காமராஜர் சாலையில் பொதுவில் உள்ள கடிகாரத்தில் நள்ளிரவு 12 மணியை படம்பிடிக்க திரண்ட கூட்டம். அத்தனை கைகளிலும் அலைபேசி. கடிகாரத்திற்கு முக்கியமா, புத்தாண்டு பிறந்த நொடி முக்கியமா! அந்த நொடியில் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்தைப் பகிர்வதற்குப் பதிலாக கடிகார முட்களைக் கவனிப்பதால் என்ன பயன்!
இப்போதெல்லாம் எங்கு சென்றாலும் நடைபாதைகளிலும், நடைமேடைகளிலும் நெரிசல். எதைப் பார்த்தாலும் அதன்முன் நின்று நிழற்படம் எடுத்துக்கொள்ளும் கும்பல். திருமணத்தில் வாழ்த்த வந்த அனைவரும் தாலிகட்டுவதைப் படம்பிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இன்னும் கொஞ்ச நாட்களில் மாப்பிள்ளையே தாலிகட்டுவதை ‘செல்ஃபி’ எடுத்துக்கொள்வார்.
தினமும் போகிற பாதையில் தெரிகிற மரங்களையும், மலர்களையும் படம் பிடிக்க சிலர் போட்டிபோடுகிறார்கள். வாழ்க்கை என்பது அதிசயப்படுவதில் அடங்கியிருக் கிறது என்பதை மறுப்பதிற்கில்லை. மலரைப் பார்த்து, மரத்தைப் பார்த்து, விண்ணில் கால் தடங்கள் பதியாமல் பறந்துபோகிற பறவைகளைப் பார்த்து, காற்றில் மிதப்பதைப்போல துள்ளி ஓடும் மான்களைப் பார்த்து அதிசயப்படுவது அவசியம். அதுவே நம் இருத்தலின் நுனிகளில் இனிப்பு தடவுகிறது, வாழ்க்கையின் நுனிகளில் மஞ்சள் தடவுகிறது.
சிலரிடம் வியக்கும் மனப்பான்மை அறவே இருக்காது. அவர்களிடம் கோஹினூர் வைரத்தைக் காட்டினாலும், கோலிகுண்டைப் பார்ப்பதைப்போல் பார்ப்பார்கள். அவர் களுக்குக் கொட்டும் அருவியும் பரவசம் தராது, முட்டும் மலையும் வியப்பைத் தராது. அப்படிப்பட்டவர்கள் முகங்களை ஐந்து நிமிடம் பார்த்தால் போதும், தூக்க மாத்திரையே தேவையிருக்காது. அவர்கள் வீட்டின் தலவிருட்சம் தூங்குமூஞ்சி மரமாகவே இருக்கும்.
சின்ன புல்லிதழில் வைரமூக்குத்திபோல காட்சியளிக்கும் பனித்துளியை ரசிப்பதால், வழியில் செல்கிறபோது விரித்துவைத்த மயிலின் தோகையைப்போல படர்ந்திருக்கும் மரங்களைத் தரிசிப்பதால் பயணம் இனிமையாகும். நீண்டதூரம் நம் நினைவுகளில் சுருக்கொப்பமாய் சூம்பிப்போகும்.
ரசிப்பது வேறு, ரசிப்பதைப்போலக் காட்டிக்கொள்வது வேறு. இன்று இளைஞர்கள் இயற்கையின் அழகை உள்வாங்குவதைவிட வெளிக்காட்டுவதே அதிகம்.
அலைபேசியில் பதிவு செய்தா திருவள்ளுவர் ‘மோப்பக்குழையும் அனிச்சம்’ என்று மகத்தான உவமையைக் கையாண்டார்!
எந்த புகைப்படத்தைப் பார்த்து கம்பன் ‘தண்டலை மயில்களாட’ என்று வார்த்தைச் சித்திரத்தை வடித்தார்!
பாரதியும், பாரதிதாசனும் கண்களால் புகைப்படமெடுத்து, நெஞ்சத்தில் அதை பதிப்பித்தார்கள்.
கற்கால மனிதன் முதல் கணினி மனிதன் வரை ரசித்தவற்றை பாறைகளிலிருந்து பளிங்குச்சுவர் முடிய ஓவியங்களாகத் தீட்டி கலையை மேன்மைப்படுத்தினார்கள்.
அமைதியில் மட்டுமே ரசிக்க முடியும். அதற்கு ஆழ்ந்த தனிமை தேவை. எதனுடனும் ஒப்பிடாமல் இருமையற்ற நிலையில் இருக்கும்போது மட்டுமே அது சாத்தியம். பூவை ரசிப்பதற்கு காம்பாக வேண்டும், மலையை ரசிப்பதற்கு மேகமாக வேண்டும், வயலை ரசிப்பதற்கு பாய்ந்து ஓடும் நீராக வேண்டும்.
‘அழகாக இருக்கிறது’ என்று நினைக்கிறபோதே நாம் வேறாக, அது வேறாக ஆகிவிடுகிறோம். அப்போது நாம் உயர்ந்த பீடத்தில் உட்காரத் தொடங்குகிறோம். நம்மைக் கரைத்துக்கொண்டு ஒன்றைக் கவனிக்கும்போது அது ஆழ்மனதில் படிந்துவிடுகிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நீண்டகால நினைவிலிருக்கும் அது நீர்த்துப்போவதில்லை. நம் முடைய நினைவுச் சுயமே ஓர் அனுபவத்தை ஆனந்தமயமாக்குகிறது.
இத்தனை ‘சுயமி’ எடுப்பவர்கள் அவற்றை எங்கே சேகரிப்பார்கள் என்பது தெரியவில்லை. கணினிகூட கட்டுப்படியாத அளவிற்கு நிழற்படமெடுத்துத்தள்ளும் அவர்கள் அந்த படங்களை அழிக்கும்போது அவற்றோடு சேர்ந்து அனுபவங்களையும் அழித்துவிடு கிறார்கள். ஒரு கட்டத்தில் அலைபேசியின் அத்தனை சக்தியும் உறிஞ்சப்படுகிறபோது புதிதாகச் சேர்க்க இடம் வேண்டி தயவுதாட்சண்யமின்றி அவற்றை நீக்குகிறார்கள்.
அலைபேசியில் ‘சுயமி’ எடுப்பது சிலருக்கு போதையாகிவிட்டது. அவர்களையும் அறியாமல் கைகள் அதைச் செய்கின்றன. அத்தனை வெளிச்சம் அடிக்கடி கண்களில் படுவது அபாயகரமானது. இப்போது கண்டுபிடிக்கப்படாததால் இவை பக்கவிளைவை ஏற்படுத்தாதவை என்ற முடிவுக்கு வர முடியாது. தொடக்கத்தில் பெரும் உதவியாக எண்ணிய நெகிழி இன்று தீர்க்க முடியாத ‘மஞ்சள் பூ மர்மம்’ ஆகி விட்டது.
தேன்கூட்டை ‘சுயமி’ எடுக்கச் சென்று கொட்டப்பட்டு வீங்கிய உதடுகள், உப்பிய முகத்தோடு தோன்றிய ஒருவரைப் பார்க்க நேர்ந்தது. கரைபுரண்டு ஓடும் வெள்ளப்பெருக்கின் அருகில் நின்று நிழற்படம் எடுக்க முயன்று தடுமாறி உயிரை ஒருவர் இழந்திருக் கிறார்.
இவையெல்லாம் நம்மை இயற்கையைக் காட்டிலும் பிரமாண்டமானவர்கள் என்று நினைப்பதால் வருகிற வினை. மாநகர விளிம்பு களைத் தாண்டி இயற்கை இருப்பிடங்களுக்குச் செல்லும்போது காணாமல் போன நம்மை வேறொரு மனிதராகக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அங்கேயும் நிழற்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் நாம் பார்த்தவற்றை பரவவிட நினைப்பது ஒருவித நார்சிசிசம். அது பயணத்தை வீணடித்துவிடுகிறது. பயணம், வீங்கிய தன்முனைப்போடு திரும்புவதற்கு அல்ல. அது விரிவடைந்த விழிப்புணர்வுடன் வருவதற்கு.
இந்தப் புகைப்படங்களை வலைத்தளங் களிலிட்டு எத்தனை பேர் அவற்றை விரும் பியிருக்கிறார்கள் என்பதை அடிக்கடி பார்க்கிற இளைஞர்கள் உண்டு. இவர்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையில் விருப்பங்கள் குவியாவிட்டால் வெறுத்துப்போய்விடுகிறார்கள். பலரும் போலியாக இவர்களின் விநோத ஒப்பனைகளை பாராட்ட, அவர்கள் அதை உண்மையென நம்பி அவற்றையே நிரந்தரமாக்கி கோமாளியாகிவிடுகிறார்கள்.
சில நேரங்களில் வீட்டினர் சொல்லும் கருத்தைவிட, முகநூல் நண்பர்கள் முக்கியம் இவர் களுக்கு. முகமே தெரியாதவர்கள்தான் பெரும்பாலும் முகநூல் நண்பர்கள்.
முகத்தை செயற்கையாக வெளுப்பாக்கி நிழற்படத்தை மெருகேற்றி இணையத்தில் உலவ விடலாம். அதை உண்மையென நம்பி காதல் அரும்ப கல்யாணம் வரை சென்று தோல்வியில் முடிந்த சம்பவங்கள் உண்டு.
அண்மையில் படித்த செய்தி நெஞ்சை உலுக்கியது. விரைவாகச் சென்ற கார் மரத்தில் மோதி தீப்பிடித்துக்கொண்டது. உள்ளே இருந்த இருவரும் கருகி இறந்தனர். எங்கு மரணம் இயல்புக்கு மீறி நடந்தாலும் நம் இதயம் ஒரு முறை நின்றுவிடுகிறது. அப்படி விபத்து நடந்த இடத்தில் அடுத்த நாளே சிலர் ஆஜர். அவர்கள் அந்த மரத்துக்குப் பக்கத்தில் நின்று புன்னகை ததும்ப ‘சுயமி’ எடுத்துக்கொண்டார்கள்.
விபத்து நடக்கிற இடங்களில் தங்களைப் பொருத்திப் பார்த்து புன்னகை புரிவது நாகரிகமாகப்படவில்லை. இன்னும் சிலரோ விபத்து நடக்கும்போதே அதைப் பதிவுசெய்வதில் காட்டுகிற ஆர்வத்தை உதவி செய்வதில் காட்டுவதில்லை.
பார்வையாளராக இருப்பதில் மனிதத்துவம் இல்லை. பறந்து சென்று உதவுவதில் அது இருக்கிறது. போனவர்கள் உயிரைவிட புகைப்படம் நமக்கு முக்கியம் என்று கருதுவதா இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் நாகரிகம்!
(செய்தி தொடரும்)