தடையை மீறி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் 26 பேர் கைது

ஆம்பூரில் தடையை மீறி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2017-06-03 23:46 GMT

ஆம்பூர்,

ஆம்பூரில் இந்து முன்னணி சார்பில் பசுவதை தடை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை விதிப்புக்கு எதிர்த்து தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் தமிழக போலி அரசியல் கட்சிகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர். இருப்பினும் தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விட்டல் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ரவிசங்கர் வரவேற்றார். எம்.தீனதயாளன், கோட்ட தலைவர் மகேஷ், கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் பாரத் நன்றி கூறினார்.

இதையடுத்து தடையை ஆர்ப்பாட்டம் செய்ததாக 26 பேரை போலீசார் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்