மராட்டியத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி மிகப்பெரிய அளவில் இருக்கும்

விரக்தியில் இருக்கும் விவசாயிகளுக்கு, ஒருபோதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வோம் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.;

Update: 2017-06-03 23:33 GMT

மும்பை,

பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில், மறைந்த பாரதீய ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டேயின் நினைவு தினத்தையொட்டி, பீட் அருகே உள்ள அவரது நினைவிடத்தில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசும்போது பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து கூறியதாவது:–

நீர்ப்பாசன வசதி, தடையற்ற மின்சாரம், உணவு பதனிடும் தொழிற்சாலை, குழு விவசாயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு தேவையான அனைத்து சாதகமான உதவிகளையும் வழங்க பா.ஜனதா தலைமையிலான அரசு கடுமையாக பாடுபடுகிறது.

ஏழைகளுக்கு சேவைபுரிய வேண்டும் என்ற கோபிநாத் முண்டேயின் கனவை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். விரக்தியில் இருக்கும் விவசாயிகளுக்கு, ஒருபோதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வோம்.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்