நாமகிரிப்பேட்டை அருகே மொபட் சக்கரத்தில் சேலை சிக்கி ஆசிரியை பலி உறவினர் காயம்
நாமகிரிப்பேட்டை அருகே மொபட் சக்கரத்தில் சேலை சிக்கி ஆசிரியை பரிதாபமாக இறந்தார். அவருடன் வந்த உறவினர் காயம் அடைந்தார்.
நாமகிரிப்பேட்டை,
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஒடுவன்குறிச்சியை சேர்ந்தவர் சுப்புரத்தினம். இவரது மனைவி முத்தமிழ்செல்வி(வயது28). இவர் கல்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.
நேற்று இவர் பேளுக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு மொபட்டில் சென்று இருந்தார். பின்னர் அவர் உறவினர் கலைவாணி(40) என்பவரை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.
சாவு
வழியில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தொப்பப்பட்டியில் வரும்போது திடீரென முத்தமிழ்செல்வியின் சேலை மொபட்டின் சக்கரத்தில் சிக்கியது. இதில் நிலைதடுமாறிய அவர் மொபட்டுடன் சாலையோரம் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். பின்னால் உட்கார்ந்து வந்த கலைவாணிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதையொட்டி இருவரும் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே ஆசிரியை முத்தமிழ்செல்வி பரிதாபமாக இறந்தார். கலைவாணி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் முத்தமிழ்செல்வி இறந்த சம்பவம் கேட்டு அவரது உறவினர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.