மத்திய அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு தடை விதித்து உள்ளது.;

Update: 2017-06-03 22:00 GMT

திண்டுக்கல்,

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, திண்டுக்கல் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பேகம்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா தலைமை தாங்கினார். பொருளாளர் மரைக்காயர் சேட் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில், மாநில துணை செயலாளர் அன்சாரி சிறப்புரை வழங்கினார். இணை பொதுச்செயலாளர் முகமதுமைதீன்உலவி மத்திய அரசை கண்டித்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முடிவில், மாவட்ட துணை செயலாளர் சரவணன் நன்றி கூறினார். இதில் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்