பச்சிளம் குழந்தைகளை கையாளுவது குறித்து செவிலியர்களுக்கான பயிற்சி வகுப்பு

பச்சிளம் குழந்தைகளை கையாளுவது குறித்து பெரம்பலூர் மாவட்ட செவிலியர்களுக்கான பயிற்சி வகுப்பு

Update: 2017-06-03 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பச்சிளம் குழந்தைகளை கையாளுவது குறித்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செவிலியர்களுக்கான பயிற்சி வகுப்பு 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பின் 2-ம் நாளான நேற்று முன்தினம் போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியின் குழந்தை நல மருத்துவர் மரு.உமாமகேஸ்வரி கலந்துகொண்டு பேசுகையில், அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு குழந்தை பிறக்கும்போது கையாளப்படவேண்டிய நடைமுறைகள் குறித்தும், குழந்தை பிறந்தவுடன் மேற்கொள்ளப்படவேண்டிய பரிசோதனைகள் குறித்தும், பிறந்த குழந்தைகளை எவ்வாறு குளிப்பாட்டுவது என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் எடை குறைந்து பிறக்கும் குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி சிகிச்சை முறைகள் குறித்து செவிலியர் களுக்கு எடுத்து கூறினார். மேலும் பிறந்த குழந்தைகளை ஒவ்வொரு செவிலியரும் முறையாக கையாளும் பட்சத்தில் குழந்தை இறப்பு என்பது பெரம்பலூர் மாவட்டத்தில் முற்றிலும் தவிர்க்கப்படும். எனவே அனைத்து செவிலியர்களும் பிறந்த குழந்தைகள் மீதும், அவர்களது தாய்மார்கள் மீதும் தனி கவனம் செலுத்தி அவர்களை பேணி பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார். இதில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சம்பத், ஒருங்கிணைப்பாளர் முகம்மது ரஷித் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்