புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலக்குழு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சின்னப்பா பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் அன்புமணவாளன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சின்னதுரை, மாவட்ட செயலாளர் உடையப்பன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முகமது சாதிக், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பசுவதை தடுப்பு என்ற பெயரில் தலித்துகள், முஸ்லிம்களை குறிவைத்து தாக்குவது, மாட்டை வைத்து அரசியல் நடத்துவது, தனி மனித உணவு சுதந்திரத்தில் கை வைப்பது உள்ளிட்ட மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.