பாலகிருஷ்ணபுரத்தில் பழுதான புதிய பாலம் சீரமைக்கும் பணி தொடங்கியது

தினத்தந்தி செய்தி எதிரொலியாக பாலகிருஷ்ணபுரத்தில் உள்ள பழுதான புதிய பாலத்தில் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

Update: 2017-06-03 22:45 GMT
கீரமங்கலம்,

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மாத்தூர் ராமசாமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது பாலகிருஷ்ணபுரம். இந்த கிராமத்தில் இருந்து அருகில் உள்ள மணக்காடு செல்லும் சாலையை மேம்படுத்தும் பணிக்காக கடந்த 2015-2016-ம் நிதி ஆண்டில் ரூ. 21 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தக்காரர் மூலம் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்தது. அப்போது அந்த சாலையில் 2 புதிய பாலங்களும் அமைக்கப்பட்டது. அந்த பாலங்கள் அமைக்கப்பட்ட சில மாதங்களுக்குள் அதில் ஏற்பட்ட பெரிய ஓட்டையை ஒப்பந்தக்காரர் சிமெண்டு கலவை கொண்டு அடைத்தார். இருப்பினும் சில நாட்களில் மீண்டும் இரு இடங்களில் ஓட்டை விழுந்தது.

சீரமைக்க உத்தரவு

இந்த நிலையில் இது குறித்து தினத்தந்தி நகர்வலம் பகுதியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அறந்தாங்கி ஒன்றிய அதிகாரிகள் உடைந்த பாலத்தை நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர் மூலம் மீண்டும் சீரமைக்க உத்தர விட்டனர். இதைத்தொடர்ந்து பாலத்தின் சிமெண்டு பூச்சுகள் உடைக்கப்பட்டு சீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதை யடுத்து சமூக நலன் கொண்டு செய்தி வெளியிட்ட தினத் தந்திக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்த னர்.

மேலும் செய்திகள்