கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதம்
கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.;
திருக்காட்டுப்பள்ளி,
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி-கல்லணை சாலையில் உள்ள சுக்காம்பார் கிராமத்தின் அருகே கொள்ளிடம் ஆற்றில் புதிதாக மணல் குவாரி அமைக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கல்லணைக்கு அருகில் உள்ள இந்த இடத்தில் மணல் குவாரி அமைத்தால் கோவிலடி, சுக்காம்பார், திருச்சினம்பூண்டி, அலமேலுபுரம், பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இது விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது என அப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்து உள்ளனர்.
இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி சுக்காம்பார் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கோவிலடி, சுக்காம்பார், திருச்சினம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதம்
தஞ்சை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஜீவக்குமார் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பூதலூர் தாசில்தார் கஜேந்திரனிடம் கிராம மக்கள் கூறியதாவது:- தொடர்ந்து மணல் கொள்ளை நடப்பதால் கொள்ளிடம் ஆற்றில் மணலே இல்லை. ஆறு முழுமைக்கும் புதர் மண்டி கிடக்கிறது. மணல் இல்லாத ஆற்றில் எந்திரங்கள் மூலம் ஆழமாக தோண்டினால் இந்த பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும். எனவே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை அமைக்க கூடாது. இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.