உப்பனாற்றில் கடல்நீர் புகுவதால் விவசாயம் பாதிப்பு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
சீர்காழி அருகே உப்பனாற்றில் கடல்நீர் புகுவதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி,
சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடற்கரை கிராமங்களான திருமுல்லைவாசல், ராதாநல்லூர், தாழந்தொண்டி, வழுதலைக்குடி, தொடுவாய், கூழையார் உள்ளிட்ட ஏராளமான கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட கிராமங்கள் கடற்கரையையொட்டி இருப்பதால் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடிநீர் முழுமையாக உப்புநீராக மாறிவிட்டது. இதனால் மேற்கண்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் அவதிப்படுகின்றனர்.
திருமுல்லைவாசல் உப்பனாற்றில் வெள்ள மதகு என்ற இடத்தில் இருந்து வழுதலைக்குடி வரை கடல்நீர் உட்புகுந்துவிடுகிறது. இதனால் திருமுல்லைவாசல், ராதாநல்லூர், தாழந்தொண்டி, எடமணல், வருசைபத்து, ஆமப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்கள் உப்புநீரால் பாதிக்கப்பட்டு, விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், உப்புநீர் புகாத வகையில் உப்பனாற்றில் இருபுறமும் கரைகள் அமைக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள சேதம் அடைந்த பழமையான பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என்றும் பொதுப்பணி துறையினரிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
நடவடிக்கை
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:- கடந்த 5 ஆண்டுகளாக திருமுல்லைவாசலில் உப்பனாற்று வழியாக கடல்நீர் புகுவதால் இந்த பகுதியில் தற்போது விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, திருமுல்லைவாசல் உப்பனாற்றில் கடல்நீர் புகாதவகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் விரைவில் சீர்காழியில் உள்ள பொதுப்பணி துறை அலுவலகத்தை விவசாயிகள் சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.