50 ஆண்டுகள் பழமை வாய்ந்த கார் நிறுத்தம் இடமாற்றம் அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவிலில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமூடு கார் நிறுத்தம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருந்ததால் இடமாற்றம் செய்யப்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் வாடகை கார் நிறுத்தம் ஒன்று செயல்பட்டு வந்தது. இது சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலால் வேப்பமூடு கார் நிறுத்தம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும், அதை வேறு இடத்துக்கு மாற்றினால் வாகனங்கள் செல்ல வசதியாக இருக்கும் என்றும் பொதுமக்கள் கூறி வந்தனர்.
நகர மக்களின் இந்த எதிர்பார்ப்பு தொடர்பாக நகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வேப்பமூடு கார் நிறுத்தத்தை அகற்றுவது தொடர்பாக நகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
வேறு இடத்துக்கு மாற்றம்
பின்னர், வேப்பமூடு கார் நிறுத்தத்தில் இருந்து வாடகை கார் ஓட்டுபவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து வாடகை கார் ஓட்டுனர்கள் ஒன்று சேர்ந்து ‘கார் நிறுத்தத்தை அகற்றினால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே நகராட்சி பூங்காவை ஒட்டியுள்ள சாலையில் வாடகை கார்களை நிறுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்‘ என்று மனு அளித்தனர். இதே கோரிக்கையை அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து டிரைவர்கள் கேட்டுக்கொண்ட இடத்திலேயே கார் நிறுத்தம் அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள். வேப்பமூடு சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து கார்களும் பூங்காவை ஒட்டியுள்ள சாலையில் நேற்று நிறுத்தப்பட்டன.
இடிக்கப்பட்டன
மேலும் காலை 6 மணியளவில் கார் நிறுத்தத்தை அகற்றும் பணி தொடங்கியது. இந்த பணியில் நகரமைப்பு அதிகாரி (பொறுப்பு) கெவின்ஜாய் தலைமையில் ஊழியர்கள் ஈடுபட்டனர். முதலில் மேற்கூரைகள் பிரித்தெடுக்கப்பட்டது.
அதன் பிறகு தூண்கள், சுவர்கள் ஆகியவை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடிக்கப்பட்டன. மதியம் 2 மணி அளவில் கார் நிறுத்தம் முழுமையாக அகற்றப்பட்டு, இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போனது. பல ஆண்டுகளாக இருந்த கார் நிறுத்தம் அகற்றப்பட்டதால் அந்த பகுதியில் வெற்றிடம் உருவானது போன்ற தோற்றம் காணப்பட்டது.
அதிகாரி விளக்கம்
இதுதொடர்பாக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் உருவாக்கப்படுவதற்கு முன்பு வேப்பமூடு சந்திப்பு தான் பஸ் நிலையமாக இருந்தது. அப்போது அமைக்கப்பட்டது தான் இந்த கார் நிறுத்தம். இது, தற்போது போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக இருந்தது. இதனால் அதை அகற்றியுள்ளோம். இந்த கார் நிறுத்தத்தில் இருந்து இயங்கப்பட்டு வந்த வாடகை கார்களை நிறுத்த பூங்காவை ஒட்டியுள்ள சாலையை தற்காலிகமாக தேர்வு செய்துள்ளோம். இதுவும் மாற்றப்படலாம்.
இதுபோல வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையமும் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. அதற்கும் நோட்டீசு கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே உள்ள மற்றொரு கார் நிறுத்தத்தையும் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.