மினி லாரி மோதி கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பலி

மினி லாரி மோதி விபத்து: கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பலி;

Update: 2017-06-03 21:06 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் வடக்கு ஆண்டாள்புரத்தை சேர்ந்தவர் பொன்ராஜ்(வயது74). இவர் மனைவி கண்ணம்மாளுடன்(65) இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சத்திரப்பட்டி ரோட்டில் வந்து கொண்டிருந்த போது அவர்கள் மீது மினி லாரி மோதியது. இதில் கண்ணம்மாள் அதே இடத்தில் இறந்து போனார். பொன்ராஜ் படுகாயத்துடன் ராஜபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்