தர்மபுரியில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இன்று திறந்து வைக்கிறார்

தர்மபுரியில் ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகளை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று (ஞாயிற்றுக் கிழமை) திறந்து வைக்கிறார்.;

Update:2017-06-04 04:00 IST
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள், தர்மபுரி தடங்கம் ஊராட்சியில் ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதேபோல் பாலக்கோட்டில் புதிய சார்பு கோர்ட்டு அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் திறப்பு விழா தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கிறது.

விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்து கொண்டு புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் மற்றும் பாலக்கோடு சார்பு கோர்ட்டு ஆகியவற்றை திறந்து வைத்து தலைமை உரையாற்றுகிறார். விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சதீஷ்குமார், விமலா, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் பேசுகிறார்கள்.

திட்ட அறிக்கை

முன்னதாக தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுபாதேவி வரவேற்கிறார். பொதுப்பணித்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு செயற்பொறியாளர் ராமசாமி திட்ட அறிக்கையை வாசிக்கிறார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன், போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர், தர்மபுரி வக்கீல் சங்க தலைவர் அப்புனுகவுண்டர், செயலாளர் சிவக்குமார், பாலக்கோடு வக்கீல் சங்க தலைவர் பெரியசாமி, செயலாளர் நூரனந்தன் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். விழாவில் நீதிபதிகள், அரசு துறை அதிகாரிகள், வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள் பங்கேற்கிறார்கள். முடிவில் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு மணி நன்றி கூறுகிறார்.

மேலும் செய்திகள்