பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி பயன்படுத்த வேண்டும் நகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல்

தர்மபுரி நகரில் ஒகேனக்கல் குடிநீர் செந்நிறத்தில் வருவதால், அதை பொதுமக்கள் காய்ச்சி வடிகட்டி பயன்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்.;

Update: 2017-06-03 22:15 GMT
தர்மபுரி,

தர்மபுரி நகரில் சுமார் 1 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கடும் வறட்சியின் பிடியில் சிக்கியிருந்த ஒகேனக்கல்லுக்கு செந்நிறத்தில் புதிய தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் தர்மபுரியில் வினியோகிக்கப்படும் ஒகேனக்கல் குடிநீர் கலங்கிய நிலையில் செந்நிறத்தில் காணப்படுகிறது. இதனால் தர்மபுரி நகரின் பல்வேறு பகுதிகளில் இந்த குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காய்ச்சி குடிக்க வேண்டும்

குடிநீர் கலங்கிய நிலையில் வரும் பிரச்சினைக்கு தீர்வு காண ஒகேனக்கல்லுக்கு வரும் ஆற்று நீரை முறையாக சுத்திகரித்து அதன்பின் தர்மபுரி நகருக்கு வினியோகிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுதொடர்பாக தர்மபுரி நகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன் தெரிவித்துள்ளதாவது:-

தர்மபுரி நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் ஒகேனக்கல் மற்றும் பஞ்சப்பள்ளி பகுதிகளில் மழை பெய்து உள்ளது. இதனால் தர்மபுரி நகராட்சி பகுதியில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் செந்நிறமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் குடிநீரை நன்றாக காய்ச்சி, வடிகட்டி பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்