உடற்பயிற்சி செய்தும் எடை குறையவில்லையா?

சிலர் எடையைக் குறைக்க வேண்டும் என்று உடற் பயிற்சி செய்து கஷ்டப்படுவார்கள். ஆனாலும் தாம் நினைத்தபடி எடை குறையாமல் ஆதங்கப்படுவார்கள்.

Update: 2017-06-03 07:46 GMT
சிலர் எடையைக் குறைக்க வேண்டும் என்று உடற் பயிற்சி செய்து கஷ்டப்படுவார்கள். ஆனாலும் தாம் நினைத்தபடி எடை குறையாமல் ஆதங்கப்படுவார்கள்.

அது ஏன்?

சமையல் எண்ணெயில் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் அதிக அளவிலும், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் குறைவான அளவிலும் உள்ளது.

கொழுப்பு அமிலங்களில் இப்படி ஏற்றத்தாழ்வு இருப்பதால், அதன் காரணமாக உடலினுள் அழற்சி ஏற்பட ஆரம்பிக்கும். எனவே சரிசம அளவில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்த விர்ஜின் ஆலிவ் ஆயிலையோ அல்லது சமையல் எண்ணெயையோ தேர்ந் தெடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

எண்ணெயில் பொரித்த உணவுகள், ‘பேக்கிங்’ செய்யப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், துரித உணவுகளில் கெட்ட கொழுப்பு அதிகம் இருக்கும்.

இவை உடலினுள் சென்றால் நல்ல கொழுப்புகளின் அளவு குறைந்து, உடலினுள் அழற்சி ஏற்பட்டு, எடை அதிகரிப்பு ஏற்படும்.

எடையைக் குறைக்கும்போது பால் பொருட்களை உண்டுவந்தால், அவையே உங்களுக்குத் தடையை ஏற்படுத்தும்.

உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறேன் என்று சர்க்கரை சேர்க்காமல் இருந்து, கடைகளில் விற்கப்படும் டயட் சோடாக்கள், ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றைக் குடித்துவந்தாலும், அவற்றில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, உடல் எடையை அதிகரிக்கும்.

உடற்பயிற்சிக் காலத்தில், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இறைச்சி வகைகளைச் சாப்பிட்டு வந்தாலும் உடல் எடையைக் குறைக்க முடியாது.

மேலும் செய்திகள்