10 ஆண்டுகள் ஆணாக நடித்த பெண்!
ஆப்பிரிக்காவில் பத்தாண்டு காலம் ஆணாக நடித்து வேலை பார்த்த பெண், சமீபத்தில் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வைரத்தை விட ஆயிரம் மடங்கு அரிதானதாக கருதப்படும் விலைமதிப்பற்ற ரத்தினக்கற்களின் மூலம் தனது வாழ்க்கையில் உயர்ந்த அந்தப் பெண்ணின் பெயர், பிளி ஹுசைன். ஆனால் பெண்ணான அவர், சுரங்கத்துக்குள் அனுமதிக்கப்படாததால் சுமார் பத்தாண்டுகள் ஆணைப்போல நடித்து வேலை செய்திருக்கிறார்.
ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் கால்நடை வளர்ப்பாளர் குடும்பத்தில் பிறந்த பிளி ஹுசைனின் அப்பாவுக்கு 6 மனைவிகள், 38 குழந்தைகள். இப்படி பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பிளி ஹுசைன் தனது வாழ்க்கையைப் பற்றிக் கூறுகையில், ‘என் அப்பா என்னை ஓர் ஆணைப் போலவே நடத்தினார். கால்நடைகள் வளர்க்கும் வேலையில் சிறிய வயதில் இருந்தே ஈடுபடுத்தப்பட்டேன். எனக்கு அந்த வாழ்க்கை கொஞ்சமும் பிடிக்கவில்லை’ என்கிறார்.
திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கை மாறும் என்ற அவரின் கனவும் பொய்த்துப் போனது. மோசமான கணவனால் திருமண வாழ்வும் அவருக்கு சோகமானதாக அமைந்தது. தன்னை மிகவும் கீழ்த்தரமாக நடத்திய கணவனை விட்டு தனது 31-வது வயதில் பிரிந்தார் பிளி.
வாழ்க்கையை நடத்த அவர் வேலை தேடத் தொடங்கினார். வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. வைரத்தை விட மிகவும் விலை உயர்ந்த ரத்தினக்கல்லான நீல நிற தான்சானைட், தான்சானியாவில் மட்டுமே கிடைக்கும். ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலையான கிளிமஞ்சாரோவின் அடிவாரத்தில் இருக்கும் சிறிய நகரான மெரெரானி வரை பிளியின் வேலை தேடும் படலம் தொடர்ந்தது. அங்கு இருந்ததோ சுரங்கத் தொழில் மட்டும்தான். ஆனால் அது கடினமானது என்பதால் பெண்களுக்கு அத்தொழிலில் அனுமதி இல்லை.
வேறு வழியில்லாமல், பிளி தன்னைத் தானே தைரியப்படுத்திக்கொண்டு, கடுமையான வேலையை எதிர்கொள்ள ஆணாக மாறினார். ஓர் ஆண் போலவே உடையணிந்து, தனது பெயரை ஹுசைன் என்று மாற்றிக்கொண்டார்.
நிலப்பரப்பில் இருந்து பல நூறு மீட்டர் ஆழத்தில் இருக்கும் வெப்பமான, இருட்டான, இறுக்கமான, அழுக்கான சுரங்கத்தில், தினமும் 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்யவேண்டும். தான்சானைட் ரத்தினக் கல்லைப் பெறுவதற்காக கிராபைட் பாறைகளைத் தோண்டியெடுப்பது, உடைப்பது, சலித்தெடுப்பது போன்ற கடினமான வேலைகளைச் செய்யவேண்டும்.
“சுரங்கத்தில் 600 மீட்டர் ஆழம் வரை செல்லவேண்டியிருக்கும். பிற ஆண்களைவிட நான் தைரியமாக இந்த வேலைகளைச் செய்வேன். ஓர் ஆண் செய்யும் அளவு கடினமாக உழைத்தேன், பெண் என்ற சந்தேகமே என் மீது எழாத வகையில் நடந்து கொண்டேன்” என்கிறார் பிளி ஹுசைன்.
ஒரு சில ஆண்டுகளில், இரண்டு விலை உயர்ந்த தான்சானைட் ரத்தினக் கற்கள் கிடைத்ததால் பிளி பணக்காரராகிவிட்டார். பெற்றோருக்கும், தனது சகோதரிக்கும் வீடுகள் கட்டிக் கொடுத்தார். சுரங்கத்தில் பயன் படுத்தப்படும் புதிய கருவிகளை வாங்கி, பல சுரங்கத் தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்தார்.
எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால் பிளி பெண் என்பது அம்பலமாகும் சூழ்நிலையும் வந்தது. சுரங்கப் பணியில் ஈடுபட்ட சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக உள்ளூர் பெண் ஒருவர் புகார் அளித்தார். குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பிளி ஹுசைனும் ஒருவர்.
போலீசார் அவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற நிலையில், பிளிக்கு தனது அடையாளத்தை வெளிப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. ஆனால் உண்மை வெட்டவெளிச்சமானபோது அவரது சக தொழிலாளர்களால் அதை நம்பவே முடியவில்லை.
தற்போது வெற்றிகரமாக தொழிலை அமைத்துக்கொண்டிருக்கும் பிளி, 70 தொழிலாளர்கள் கொண்ட ஒரு சுரங்க நிறுவனத்தின் முதலாளியாக உயர்ந்திருக்கிறார். அதில் மூன்று பேர் பெண்கள் என்றாலும், அவர்களின் வேலை சமைப்பதுதான், சுரங்க வேலை அல்ல. தான் இந்தத் தொழிலில் ஈடுபட்டபோது இருந்ததைவிட இப்போது இந்தத் துறையில் பெண்கள் அதிகமாகிவிட்டாலும், இன்றும் அவர்களின் எண்ணிக்கை சொற்பம்தான் என்று பிளி கூறுகிறார்.
பிளி தனது கடின உழைப்பினால் அடைந்த வெற்றியால் தனது உடன்பிறந்தவர்களின் முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பேரக் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கிறார். ஆனால், தனது சொந்த மகளே தனது வழியைப் பின் பற்றுவதை பிளி விரும்பவில்லை.
“என்னுடைய கடின உழைப்பு, அதன் மூலம் நிறைய பணம் சம்பாதித்தது என பெருமைப்பட நிறைய விஷயங்கள் இருந்தாலும், அது சுலபமானதில்லை, நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும், வேறு யாரும் அதுபோன்ற கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளக்கூடாது” என்கிறார், சுரங்கப் பெண்மணி பிளி.
“என் மகள் பள்ளிக்குப் போய் கல்வி கற்கட்டும், அதன்பிறகு வாழ்க்கையில் அவள் விரும்பும் எந்த வேலையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கட்டும், ஆனால் எனக்குக் கிடைத்ததைப் போன்ற அனுபவங்களை அவள் எதிர்கொள்ளவேண்டாம்” என்று ஓர் அன்பான தாயாக இவர் கூறுகிறார்.
பிளி ஆணாக நடித்த காலத்தில் எல்லோரும் அவரை ‘அங்கிள் ஹுசைன்’ என்று அழைத்திருக்கிறார்கள். தற்போதும் அந்தப் பெயரிலேயே அவரை அழைக்கிறார்கள்.