தன்னம்பிக்கையின் மறுபெயர் லாய் சி வாய்!

ஹாங்காங்கைச் சேர்ந்த 33 வயது லாய் சி வாய், ஆசிய மலையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் 4 முறை பட்டங்களை வென்றிருக்கிறார்.

Update: 2017-06-03 06:15 GMT
ஹாங்காங்கைச் சேர்ந்த 33 வயது லாய் சி வாய், ஆசிய மலையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் 4 முறை பட்டங்களை வென்றிருக்கிறார். 2011-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது மோசமான விபத்து ஏற்பட்டது.

“நான் கண் விழித்தபோது மருத்துவமனையில் இருந்தேன். எனக்குச் சில அறுவை சிகிச்சைகள் முடிந்திருந்தன. இனி நான் சக்கர நாற்காலியில்தான் என் வாழ்நாட்களைக் கழிக்க வேண்டும் என்றும் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்றும் சொன்னார்கள். மருத்துவமனையில் இருந்து திரும்பிய என்னை, குடும்பத்தினரும் நண்பர்களும் அக்கறையுடன் அரவணைத்துக்கொண்டார்கள். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே குத்துச்சண்டை பயிற்சி செய்துகொண்டிருந்தேன். அதைப் பார்த்த என் நண்பர்கள், சக்கர நாற்காலியுடன் மலையேறுவதற்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்கள். 2014-ம் ஆண்டு ஹாங்காங்கின் புகழ்பெற்ற லயன் மலையில் முதல் முயற்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தேன். 500 மீட்டர் மலை என்னை வா, வா என்று அன்போடு அழைத்துக்கொண்டே இருந்தது. இரண்டாண்டுகள் நன்றாகப் பயிற்சி செய்தேன். 2016 டிசம்பர் 9-ந் தேதி சக்கர நாற்காலியுடன் மலையேறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினேன். நான் எதையும் இழந்துவிடவில்லை என்பதை இந்த மலையேற்றம் எனக்கு உணர்த்தியிருக் கிறது” என்று மகிழ்கிறார் லாய் சி வாய்.

மீடியாக்களிலும் சமூக வலைத்தளங்களிலும் லாய் சி வாயைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மலையேற்றப் பயிற்சியாளர் ஒருவர், “சக்கர நாற்காலியுடன் மலையேறுவதை இதுவரை யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். லாய் சி வாய் சக்கர நாற்காலியுடன் மலையேறியது உண்மையிலேயே மிகப் பெரிய சாதனை” என்று சிலிர்க்கிறார்.

மேலும் செய்திகள்