பசுமை வீடு திட்டத்துக்கு ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

Update: 2017-06-03 00:07 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் 2016–2017–ம் ஆண்டிற்கு குமரி மாவட்டத்திற்கு 322 பசுமை வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆதிதிராவிடர் பிரிவிற்கு ஒதுக்கப்பட்ட 84 வீடுகளில், 27 வீடுகளுக்கு தகுதியான பயனாளிகள் கிடைக்காததால் பணி உத்தரவு வழங்கப்படாமல் உள்ளது. எனவே குமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் பயனடைய தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் பயனாளிகள் இருப்பின் வருகிற 12–ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தையோ அல்லது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம். அவ்வாறு தொடர்பு கொள்ளும்போது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சொத்துக்கான ஆவணங்கள், சாதி சான்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றுவதற்கான அடையாள அட்டை ஆகியவற்றை உடன் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்