பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2017-06-02 23:31 GMT

மும்பை

பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தானே– கல்யாண்

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் உள்ள தானே– கல்யாண் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஸ்லோ வழித்தடத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 11.20 மணி முதல் மாலை 4.20 மணி வரை வாராந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே காலை 10.48 மணி முதல் மாலை 4.23 மணி வரை ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் முல்லுண்டு– கல்யாண் இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரெயில்கள் கல்வா, மும்ரா, கோபர், தாக்குர்லி ஆகிய ரெயில்நிலையங்களில் நிற்காது. பயணிகள் சி.எஸ்.டி. நோக்கி வரும் ஸ்லோ ரெயில்களில் ஏறி மேற்கூறப்பட்ட ரெயில்நிலையங்களுக்கு செல்லலாம்.

காலை 10.20 மணி முதல் பிற்பகல் 2.42 மணி வரை சி.எஸ்.டி.யில் இருந்து புறப்படும் விரைவு ரெயில்கள் அனைத்தும் காட்கோபர், விக்ரோலி, பாண்டுப், முல்லுண்டு, திவா மற்றும் வழக்கமாக நிற்கும் ரெயில் நிலையங்களில் நின்று வரும். கல்யாணில் இருந்து புறப்படும் விரைவு ரெயில்கள் அனைத்தும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.08 மணி முதல் திவா, முல்லுண்டு, பாண்டுப், விக்ரோலி, காட்கோபர், குர்லா மற்றும் வழக்கமாக நிற்கும் ரெயில் நிலையங்களில் நின்று வரும்.

ரெயில்கள் இயக்கப்படாது

துறைமுக வழித்தடத்தில் குர்லா– வாஷி இடையே காலை 11.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10.35 மணி முதல் பிற்பகல் 3.37 மணி வரை சி.எஸ்.டி.யில் இருந்து பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷிக்கும், காலை 10.20 மணி முதல் பிற்பகல் 3.48 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.டி.க்கும் ரெயில்கள் இயக்கப்படாது. எனினும் பராமரிப்பு பணியின் போது சி.எஸ்.டி. – குர்லா, வாஷி – பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்