கிராமப்புறங்களில் சேவையாற்ற டாக்டர்கள் கிடைப்பது கடினமாக உள்ளது
கிராமப்புறங்களில் சேவையாற்ற டாக்டர்கள் கிடைப்பது கடினமாக உள்ளதாக மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.
பெங்களூரு,
படிப்பை முடித்து ஆயிரக்கணக்கான டாக்டர்கள் வெளியே வந்தாலும் கிராமப்புறங்களில் சேவையாற்ற டாக்டர்கள் கிடைப்பது கடினமாக உள்ளதாக மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.
நவீன சி.டி. ஸ்கேன்
பெங்களூரு பைரசந்திரா பகுதியில் சஞ்சய்காந்தி அரசு விபத்து காயம் மற்றும் எலும்பு சிகிச்சை மருத்துவமனை உள்ளது. அதில் நவீன ஸ்கேன் கருவி வாங்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ரமேஷ்குமார் கலந்து கொண்டு, அந்த கருவியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
இங்கு இருந்த பழைய சி.டி.ஸ்கேன் கருவி மாற்றப்பட்டு, ரூ.3.24 கோடி செலவில் நவீன சி.டி.ஸ்கேன் கருவி வாங்கப்பட்டுள்ளது. இந்த ஆஸ்பத்திரி நிகர்நிலை அந்தஸ்துடன் செயல்படுகிறது. தனியார் மருத்துவமனைகளை விட சிறப்பான மருத்துவ சிகிச்சை வசதிகள் இங்கு கிடைக்கின்றன. கர்நாடகத்தில் 900 மருத்துவ நிபுணர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
டாக்டர்கள் பற்றாக்குறை
இந்த காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக டி.என்.பி. படிப்பு அறிமுகம் செய்யப்படுகிறது. 2 மருத்துவ கல்லூரிகளில் இந்த படிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் 2,553 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. கிராமப்புறங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது.
கர்நாடகத்தில் உள்ள 53 மருத்துவ கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் உருவானாலும், கிராமப்புறங்களில் சேவையாற்ற டாக்டர்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. சில நேரங்களில் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. டாக்டர்களை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ரமேஷ்குமார் பேசினார்.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
அந்த மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சந்திரசேகர் பேசுகையில், “இந்த ஆஸ்பத்திரியில் முதல் முறையாக 100 ஏழை நோயாளிகளுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது. ஏற்கனவே நாங்கள் 3 ஆயிரம் நோயாளிகளுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். தனியார் மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணம் வழங்க வேண்டும். மூட்டு பிரச்சினை உள்ளவர்கள் முதலில் இங்கு பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன் பிறகு மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆஸ்பத்திரியில் வந்து சேர வேண்டும்“ என்றார்.