எனது வாழ்க்கை வரலாறு குறித்து சினிமா எடுக்க அனுமதி இல்லை எடியூரப்பா பேட்டி
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
பெங்களூரு,
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
எனது வாழ்க்கை வரலாறு குறித்து சினிமா எடுக்க யாருக்கும் அனுமதி இல்லை. அதற்கான தேவையும் இல்லை. இதில் யாரும் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். சினிமா எடுப்பது குறித்து இயக்குனர்களோ அல்லது தயாரிப்பாளர்களோ என்னை தொடர்பு கொண்டது இல்லை. இது தொடர்பாக சில தகவல்கள் வெளியாயின. அதனால் குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக நான் இந்த கருத்தை கூறுகிறேன்.
கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது வேண்டுமானலும் வரலாம். தற்போது தேர்தல் வரவுள்ளது போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. நான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். எனது கவனம் முழுவதும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது தான். அதனால் வேறு விஷயங்களில் நான் கவனம் செலுத்த மாட்டேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.