போலீசார் அடிக்கடி விசாரணைக்கு அழைப்பதாக கூறி செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
போலீசார் அடிக்கடி விசாரணைக்கு அழைப்பதாக கூறி செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி குன்னோஜி ராஜாம்பாளையம் தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 35). இவர் மீது வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல், குடிபோதையில் தகராறு செய்தல் என பல்வேறு வழக்குகள் மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் உள்ளன. இதனால் இவரை மன்னார்குடி போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்வது வழக்கம். இந்த நிலையில் வடிவேல் நேற்று அதிகாலை 2 மணிக்கு மன்னார்குடி அன்னவாசல் தெருவில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறினார். மேலே ஏறி அவர் தன்னை போலீசார் அடிக்கடி விசாரணை அழைப்பதால் நான் தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார்.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வடிவேலை செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் அவர் இறங்காமல் கோபுரத்தின் உச்சிக்கு சென்று விட்டார். இந்த தகவலை அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் போலீசார் அவரை சமாதானம் செய்து கீழே இறங்க வைத்தனர். தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.