காதலிக்குமாறு வாலிபர் தொல்லை கொடுத்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

காதலிக்குமாறு வாலிபர் தொல்லை கொடுத்ததால், கீரனூர் அருகே கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-06-02 23:15 GMT
கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள துவரவயல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவீரன். இவரது மகள் சசிகலா (வயது 20). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வாலிபரை பிடித்து விசாரணை

போலீசார் முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த குணா (24), என்பவர் சசிகலா தினமும் மாலையில் கல்லூரி முடிந்து வீட்டிற்கு நடந்து செல்லும்போது, காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள் ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சசிகலா தனது வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த குணா தன்னை காதலிக்குமாறு சசிகலாவிடம் தொல்லை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த சசிகலா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குணாவை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்