தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கொங்கல் நகரத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்;
குடிமங்கலம்,
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பண்ணைக்கிணறு ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பண்ணைக்கிணற்றை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் ரமேஷ் (25) என்பவர் குடிமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் குடிமங்கலம் போலீசார் பண்ணைக்கிணற்றை சேர்ந்த கவுதம், அருண், பழனி, பாலசுப்பிரமணி, ஜல்லிப்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி உள்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். வழக்குப்பதிவு செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் முருகன் தலைமையில் கொங்கல் நகரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தீண்டாமை கொடுமை, மனித உரிமை மீறலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.